Advertisment

புன்னகை தேச பட நடிகர் படப்பிடிப்பில் விபத்து!

Accident in the shooting of the actor of Punnagai desam

Advertisment

ஹம்சவிர்தன் நடிக்கும் அதிரடி சஸ்பென்ஸ் கமர்ஷியல் திரைப்படமான 'மகேஸ்வரா' படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது விபத்து ஏற்பட்டு சிறு காயங்களுடன் ஹம்சவிர்தன் உள்ளிட்டோர் தப்பினர்.

'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் நடித்த ஹம்சவிர்தன் நாயகனாக நடிக்கும் புதிய படமான 'மகேஸ்வரா' முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.

ரெட் டிராகன் எண்டர்டெயின்மென்ட் பேனரில் ஹம்சவிர்தன் தயாரிக்கும் இப்படத்தை மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஹரா' படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார். உயர்ரக சொகுசு பென்ஸ் கார் ஒன்றை நொறுக்கி தரைமட்டமாக்கும் பரபரப்பான சண்டைக் காட்சி அரியலூர் நெடுஞ்சாலையில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன் தலைமையில் படமாக்கப்படும் போது சற்றும் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டது. இதில் சிறு காயங்களுடன் ஹம்சவிர்தன் உள்ளிட்டோர் தப்பினர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Advertisment

ராம்கி, 'கே ஜி எஃப்' புகழ் கருடா ராம், பி எல் தேனப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முதல் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில், முன்னணி நட்சத்திரங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொள்கின்றனர். சஸ்பென்ஸ் கலந்த அதிரடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாக உள்ள 'மகேஸ்வரா' படப்பிடிப்பு ரஷ்யா, பொலிவியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு மோகன் குமார் ஒளிப்பதிவு செய்ய ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார். இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் 'மகேஸ்வரா' திரைப்படத்தில் ஹம்சவிர்தன் நடிக்கிறார். அதிக பொருட்செலவில், விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe