புதுச்சேரியில் நகைக்கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் பிரபு மற்றும் நடிகை ரெஜினா ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் வருகையால் அப்பகுதி சற்று பரபரப்பாகக் காணப்பட்ட நிலையில் அவர்களைக் காணகூட்டம் கூடியது.
அவர்கள் வந்தவுடன் கூட்ட நெரிசல் அதிகமானதால் கடையின் முகப்பு கண்ணாடி உடைந்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் 5க்கும் மேற்பட்டோருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. திறப்பு விழாவில் கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, புதுச்சேரி தனக்குநெருக்கமான பகுதி என்றும் ரங்கசாமி முதல்வராக இருந்தபோது, அப்பா சிவாஜிக்கு அவர் தான் முதல் முதலாக இந்தியாவில் சிலை அமைத்ததாகவும்தெரிவித்தார்.