செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தை வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். 

Advertisment

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கடலில் நடக்கும் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகிறது. இதனால் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கடல் பகுதிகளில் படமாக்கப்படுகிறது. அந்த வகையில் இராமநாதபுர கடலில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆனால் தற்போது படப்பிடிப்பில் விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

படகில் படப்பிடிப்பு நடந்த நிலையில் எதிர்பாராத அலை காரணமாக படகு கவிழ்ந்ததாகவும் இதில் படக்குழுவினர் உயிர்சேதம் இல்லாமல் தப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரூ.1 கோடி மதிப்புள்ள கேமரா சேதமடைந்துள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன