/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/56_73.jpg)
நயன்தாரா நடித்த ‘அறம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து ஆண்ட்ரியாவை வைத்து இப்போது ‘மனுசி’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். இதனிடையே ஜெய்யை வைத்து, ‘கருப்பர் நகரம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரியில் வெளியாகவுள்ளது.
இதனைத்தொடர்ந்து ராதிகாவை லீட் ரோலில் வைத்து காலனி என்கிற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருவதாகத்தகவல் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு திருவள்ளூர் செங்குன்றத்தில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது லைட்மேன் சண்முகம் மற்றும் அவருடன் இருந்த ரஞ்சித் என்பவருக்கும் திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி எறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பின்பு உடனடியாக இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில்அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், சண்முகம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத்தெரிவித்துள்ளாராம். மேலும் ரஞ்சித் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகப் பேசப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)