accident in arr film city light man passed away

வசந்த்ரவி மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வெப்பன்'. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர்சென்னியப்பன் இயக்குகிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

திருவள்ளூர்மாவட்டம் கும்மிடிப்பூண்டியைஅடுத்த ஐயர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர் ஃபிலிம்சிட்டி உள்ளது. இங்கு 'வெப்பன்' படம் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில்,இன்று காலை படப்பிடிப்பின்போது லைட்மேனாக பணிபுரியும்குமார் என்பவர் சுமார் 40 அடிஉயரத்தில் மின்விளக்குகள் அமைக்கும் பணியில்ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்தஅவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

Advertisment

மருத்துவமனையில் குமாரைபரிசோதித்த மருத்துவர்கள், அவர்வரும் வழியிலே இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர். அவருக்கு வயது 47. இதையடுத்து அவரதுஉடல் உடற்கூராய்விற்காக பொன்னேரிஅரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தச் சம்பவம் திரையுலகினர் இடையேஅதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.