Advertisment

புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த 'ஆஸ்கர்'! 

academy award

வருடா வருடம் 'ஆஸ்கர்' அகடாமி விருது குழு புது உறுப்பினர்களுக்கு அழைப்பு கொடுத்துச் சேர்த்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான புதிய உறுப்பினர்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது. ஒருசில ஆண்டுகளாக ஆஸ்கர் மீது வைக்கப்படும் விமர்சனங்களைமுறியடிக்கும் விதமாக 'ஆஸ்கார்' குழு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் 'ஆஸ்கர்' குழு உலகம் முழுவதிலும் இருந்து சினிமா தொடர்புடையவர்களை அழைத்து உறுப்பினர்களாக்குகிறது.

Advertisment

இந்த முறை 819 புதிய கலைஞர்களை உறுப்பினர்களாக்க அழைப்பு விடுத்துள்ளது. இதில் இந்தியாவில் நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 'கல்லி பாய்', 'ராஸி' உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக ஆலியாவும், 'ஜோதா அக்பர்', 'சூப்பர் 30' உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக ஹ்ரித்திக் ரோஷனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

சென்னையை மையமாக வைத்து செயல்படும் கியூப் தொழில்நுட்ப துணை நிறுவனர் செந்தில்குமாருக்கு உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து நந்தினி ஷ்ரிகாந்த், ஆடை வடிவமைப்பாளர் நீதா லுல்லா, ஆவணப்பட இயக்குனர்கள் இஷ்தா ஜெயின் மற்றும் அமித் மாதேஷியா, தயாரிப்பாளர் ப்ரியா சுவாமிநாதன், இசைக் கலைஞர் நைனிதா தேசாய், கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் விஷால் ஆனந்த் உள்ளிட்டோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் அகாடமி விருதுகள் (ஆஸ்கர்) ஏப்ரல் 25, 2021 அன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

oscar awards
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe