abishek bachan

Advertisment

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுவும் மும்பை மாநகரில் தினந்தோறும் பலரும் இந்ததொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அண்மையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி உள்ளிட்டோர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தற்போது அமிதாப் பச்சன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரது மகன் அபிஷேக் பச்சன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இதுதொடர்பாக அபிஷேக் பச்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “துரதிர்ஷ்டவசமாக மீண்டும் கரோனா டெஸ்ட்டில் பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் இருக்கிறேன். என்னுடைய குடும்பத்துக்காக உங்களுடைய வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கும் மீண்டும் நன்றி,மிகவும் கடன்பட்டிருக்கிறேன். விரைவில் இதைக் கடந்து ஆரோக்கியமாகத் திரும்பி வருவேன்.

சமீபத்தில் நடந்த பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு என் தந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அவருக்காக உங்களுடைய வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.