
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுவும் மும்பை மாநகரில் தினந்தோறும் பலரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அண்மையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி உள்ளிட்டோர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
அதன்பின் கடந்த வார தொடக்கத்தில் அமிதாப் பச்சன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது, அவரது மகன் அபிஷேக் பச்சன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் தற்போது அவருக்கு கரோனா டெஸ்ட் நெகட்டிவ் என்று வந்திருப்பதால வீடு திரும்பியுள்ளார்.