Published on 19/09/2020 | Edited on 19/09/2020

சர்வதேச போலீஸாரால் பல வருடங்களாக வலைவீசி தேடப்பட்டு வருபவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். 1993ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை வெடிகுண்டு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களுக்காக சர்வதேச போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இன்றுவரை அவரை பிடிக்கமுடியவில்லை.
இந்த சூழலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தாவூத்துடன் கைக்குலுக்கும் புகைப்படம் என்று தவறான புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த புகைப்படத்தில் இருப்பது தாவூத் இப்ராஹிம் இல்லை என்றும் அது மஹாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் அசோக் சங்கரராவ் என்றும் விளக்கம் அளித்துள்ளார் அபிஷேக் பச்சன்.