Advertisment

பிக்பாஸ் முகினின் தாய், தங்கையை சந்தித்த அபிராமி...

இந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 75 நாட்களைதாண்டிவிட்டது. பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா, அபிராமி, வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக உள்ளே வந்த கஸ்தூரியும் இதுவரை வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

mugen rao mom and sis

நடிகை அபிராமி நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியானது. பிக்பாஸிலிருந்து வெளியேறியவுடன் படத்தை பார்த்துவிட்டு, ட்விட்டரில் அஜித் ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்திருந்தார். பின்னர், தனக்கு இத்தனை வாரங்களாக வாக்களித்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க செய்த ரசிகர்களுக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்.

இதனையடுத்து நடிகை அபிராமி, தனக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து வந்தார். அதன்படி மோகன் வைத்யாவை முதல் ஆளாக சந்தித்த அபிராமி, அவரது நெருங்கிய தோழி சாக்‌ஷி அகர்வாலையும் சந்தித்தார். அவரைத் தொடர்ந்து சான்டி மாஸ்டரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்த அபிராமி, அதற்கான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Advertisment

இந்நிலையில் பிக்பாஸில் தன்னுடைய நெறுங்கிய நண்பரான முகின் ராவின் தயாரையும், தங்கையையும் அபிராமி சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

Biggboss mugen
இதையும் படியுங்கள்
Subscribe