கடந்த ஃபிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தீவிரவாத தக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக நாடுகள் பல, இந்த தாக்குதலை கண்டித்தன. ஜெய்ஷ்-இ- முகமது என்ற பிரிவினைவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டது.

Advertisment

ajith vivek

இதற்கு தக்க பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி முகாமை தாக்கியது. இதில் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவங்களை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் புதிய படம் தயாராகிறது. இந்த படத்தை விவேக் ஓபராய் தயாரிக்கிறாராம். விமானப்படை வீரர் அபிநந்தன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார் என்னும் தேர்வு நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த படம் குறித்து விவேக் ஓபராய் கூறும்போது, “நமது படையினரின் வீரத்தை போற்றவேண்டியது ஒரு இந்தியன் என்ற முறையில் எனது கடமை. அபிநந்தன் உள்ளிட்ட நமது வீரர்களின் சாகசங்கள் இந்த படத்தின் மூலம் வெளிப்படும். பாலகோட் தாக்குதலை இந்திய விமானப்படை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியது. அபிநந்தன் இந்தியர்களுக்கு பெருமை தேடி கொடுத்துள்ளார். இந்த படத்தை எடுக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது” என்றார்.