Advertisment

இலங்கை அகதிகள் 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்!

hdfh

இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதன் காரணமாக மதுரை ஆனையூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கரோனாவால் தங்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வறுமையில் வாடிவந்த நிலையில் நடிகர் அபி சரவணன் அவருடைய நண்பருடன் இணைந்து முதல்கட்டமாக கடந்த வாரம் 600 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி பருப்பு உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்நிலையில் இரண்டாவது முறையாகத் தற்போது 500 குடும்பங்களுக்குத் தேவையான 13 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பைஇன்று வழங்கினார். இது மட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கும், திருநங்கைகளுக்கும் உதவிப் பொருட்களை வழங்கியுள்ளார் நடிகர் அபி சரவணன் .

Advertisment

abi saravanan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe