Skip to main content

"நான் எப்போதும் என்னை ஒரு நட்சத்திரத்தின் மகனாக கருதுவது கிடையாது" - நாசர் மகன் பேச்சு!

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

grherhe

 

சியான் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' படம் மூலம் நடிகராக அறிமுகமான நாசர் மகன் அபி ஹாசன் தற்போது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் அபி ஹாசன் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தன் தந்தை நாசர் குறித்தும், கதை தேர்வு குறித்தும் பேசியுள்ளார். அதில்...  


"நான் எப்போதுமே என்னை ஒரு நட்சத்திரத்தின் மகனாக கருதுவது கிடையாது. ஒரு கதையை தேர்வு செய்வது என்பதை நான் என்னுடைய கடமையாகவே பார்க்கிறேன். கதை தேர்வு விஷயத்தில் அப்பா, அம்மாவின் ஆதரவு எப்போதும் இருந்தாலும் இதைத்தான் செய்யவேண்டும், அதைத்தான் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எனக்கு கிடையாது. போதுமான அளவு சுதந்திரம் கொடுத்திருக்கின்றனர். அவர்களின் ஆசீர்வாதம் இருப்பதால் முடிந்தவரை நல்ல கதையாக இருக்கவேண்டும், அதில் குறைந்தபட்சம் நல்ல கருத்துக்கள் இருப்பது போல் கதையைத் தேர்வு செய்கிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''நடமாட விடமாட்டோம் என்றவர் தற்போது நடமாட முடியாமல் ஒளிந்து வாழ்கிறார்" - அமைச்சர் நாசர் பேட்டி

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

minister naasser pressmeet

 

"கடந்த ஆட்சியில் திமுகவினரை நடமாட விடமாட்டோம் என்று பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தற்போது நடமாட முடியாமல் ஒளிந்து தலைமறைவாக வாழ்ந்துவருகிறார்" என கிண்டலடித்துப் பேசியுள்ளார் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர்.  

 

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர், இன்று (24.12.2021) உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்கு வந்து தரிசனம் மேற்கொண்டார். தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் அமைச்சருக்கு வரவேற்பு கொடுத்து நினைவுப் பரிசை வழங்கினார். அங்கு நடந்த தொழுகையில் பங்கேற்றுவிட்டு வெளியில் வந்தவர், ராஜேந்திரபாலாஜி தலைமறைவு குறித்தான கேள்விக்குப் பதிலளித்தார்.

 

அப்போது பேசிய அவர், "கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எதிரியே இல்லை என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தால் நடமாடவே விடமாட்டோம் என்று சொன்னார் ராஜேந்திரபாலாஜி. ஆனால் அவர் தற்போது தலைமறைவாகியிருக்கிறார். அவர் செய்த தவறுக்கு ஓடி ஒளிந்து பரிகாரம் தேடிவருகிறார். ராஜேந்திரபாலாஜி மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே உள்ளன. அதனால் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தவறு செய்ததால்தான் தலைமறைவாக ஒளிந்து வாழ்கிறார். மேலும், 2 லட்சத்து 30 ஆயிரம் உற்பத்தியாளர்களுக்குத் தீபாவளி பட்டாசு வழங்கியதில் மோசடி செய்துள்ள விவகாரத்திலும் ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளார். கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்" என்று கடுமையாக விமர்சித்தார்.

 

மேலும், "அதிமுக ஆட்சியிலேயே திமுக உள்ளாட்சித் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றதுபோல், வருகிற நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மாபெரும் வெற்றிபெறுவோம். இந்த ஆண்டு பொங்கல் விற்பனைக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் நெய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு தொகுப்பின் 21 பொருட்களில் 100 கிராம் நெய்யும் இடம்பெறும்" என்று கூறினார். 

 

 

Next Story

"கலைஞனுக்கு அங்கீகாரமும் விருதுகளும் தான் மனநிறைவு" - நாசர் பாராட்டு!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021

 

grhds

 

இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2019-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த படமாக 'அசுரன்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளார். 'விஸ்வாசம்' படத்துக்குக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை டி.இமான் தட்டிச் சென்றார். சிறந்த துணை நடிகர் விருதை விஜய்சேதுபதி தட்டிச் சென்றார். ஒத்த செருப்புக்காக பார்த்திபன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் பல துறைகளில் தேசிய விருதை தட்டிச் சென்றனர். இவர்களுக்குத் திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் நாசர் இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்....

 

"என்னதான் மாபெரும் பொருளாதார வெற்றி ஈட்டினாலும் ஒரு கலைஞனுக்கு அங்கீகாரமும் விருதுகளும் தான் மனநிறைவும், அகமகிழ்வும்...

 

வருட காலமாய் துவண்டு கிடந்த தமிழ்த் திரைத்துறைக்கு சமீபத்திய விருது செய்தி, புத்துணர்ச்சி, புது வேகம் மற்றும் உத்வேகத்தைக் கொடுக்கிறது. ‘அசுரன்’ படத்திற்காக சிறந்த நடிகர் தேசிய விருது பெற்ற தனுஷ், சிறந்த படம் ‘அசுரன்’ படத்திற்காக தயாரிப்பாளர் எஸ்.தாணு, டைரக்டர் வெற்றிமாறன், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது பெற்ற விஜய்சேதுபதி, ‘விஸ்வாசம்’ படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற டி.இமான், பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு நம்பர்7’ படத்திற்காக இரண்டு தேசிய விருது பெற்ற ஆர்.பார்த்திபன், ஒலி வடிவமைப்பு செய்த ரசூல்பூக்குட்டி, சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் இப்படி தமிழ்த்திரையின் வரலாற்றுப் புத்தகத்தில் பொன்னேடுகள் பொறித்த நடிகர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் அனைவருக்கும் நடிகர் சமூகம் சார்பாக பெருமைமிகு வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.