grherhe

Advertisment

சியான் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' படம் மூலம் நடிகராக அறிமுகமான நாசர் மகன் அபி ஹாசன் தற்போது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் அபி ஹாசன் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தன் தந்தை நாசர் குறித்தும், கதை தேர்வு குறித்தும் பேசியுள்ளார். அதில்...

"நான் எப்போதுமே என்னை ஒரு நட்சத்திரத்தின் மகனாக கருதுவது கிடையாது. ஒரு கதையை தேர்வு செய்வது என்பதை நான் என்னுடைய கடமையாகவே பார்க்கிறேன். கதை தேர்வு விஷயத்தில் அப்பா, அம்மாவின் ஆதரவு எப்போதும் இருந்தாலும் இதைத்தான் செய்யவேண்டும், அதைத்தான் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எனக்கு கிடையாது. போதுமான அளவு சுதந்திரம் கொடுத்திருக்கின்றனர். அவர்களின் ஆசீர்வாதம் இருப்பதால் முடிந்தவரை நல்ல கதையாக இருக்கவேண்டும், அதில் குறைந்தபட்சம் நல்ல கருத்துக்கள் இருப்பது போல் கதையைத்தேர்வு செய்கிறேன்"என்றார்.