Advertisment

அபிஷேக் பச்சன் - விஜய் சேதுபதி; கௌதம் மேனன் புது திட்டம்?

Abhishek Bachchan Vijay Sethupathi joins in Gautham Menon new project

இயக்கம், நடிப்பு என இரண்டு துறையிலும் பிசியாக பயணித்து வருகிறார் கௌதம் மேனன். அந்த வகையில் நடிகராக வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இயக்குநராக விக்ரமை வைத்து 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் பண்ண திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் பான் இந்தியா படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாவதாகவும் இது தொடர்பாக அபிஷேக் மற்றும் விஜய் சேதுபதியை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அருண் விஜய்யை வைத்து கௌதம் மேனன் ஒரு படம் பண்ண உள்ளதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.

Advertisment

அபிஷேக் பச்சன்தற்போது இந்தியில் 'கூமர்' படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி 'குரங்கு பொம்மை' பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

actor vijay sethupathi gautham menon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe