தேசிய விருது பெற்ற தமிழ் படம் - இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்

Abhishek Bachchan to star in Hindi remake of Tamil film KD

மதுமிதா இயக்கத்தில் மு.ராமசாமி, நாக விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த படம் 'கே.டி என்கிற கருப்புதுரை'.

80வயது நிறைந்த முதியவருக்கும் எட்டு வயது சிறுவனுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தம் கலந்து அழகாகக்காண்பித்திருப்பார் இயக்குநர் மதுமிதா. மேலும் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நாக விஷாலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் 'கே.டி என்கிற கருப்புதுரை' படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மு.ராமசாமி நடித்த கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை நிகில் அத்வானி தயாரிப்பதாகவும் தமிழில் இயக்கிய மதுமிதாவே இந்தியில் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் தற்போது இந்தி கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு திரைக்கதை மாற்றும் பணியில் மதுமிதா தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Bollywood
இதையும் படியுங்கள்
Subscribe