Abhishek Bachchan

பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. படம் முழுவதும் தனி நபராக பார்த்திபன் திரையில் தோன்றி நடித்தது இந்திய சினிமாவில் புதிய முயற்சியாகப் பார்க்கப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றது.

Advertisment

இந்த நிலையில், ஒத்த செருப்பு திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தியில் நடிகர் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக அபிஷேக் பச்சன் மும்பை விரைந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Advertisment

இது குறித்து தன்னுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அபிஷேக் பச்சன், அறுவை சிகிச்சை தனக்கு நல்லமுறையில் நடந்ததாகவும், மீண்டும்படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.