/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A out 2_3.jpg)
‘இரு துருவம்’ வெப் சீரிஸில் நடித்துள்ள அபிராமி வெங்கடாசலம் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம்; அப்போது அவர் பல சர்ச்சையான விசயங்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு.
'இரு துருவம்' வெப் சீரிஸ் குறித்த அனுபவங்கள்?
நான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிப்பதற்கு முன்பே இரு துருவம் வெப் சீரிசில் கமிட்டானேன். அதுதான் என்னுடைய கரியர் தொடங்கிய நேரம். நல்ல ஒரு கிரைம் திரில்லர் அது. முதல் சீசனில் எப்படியாவது நான் செலக்ட் ஆகிவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அதில் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம்.
நிஜமான அபிராமியை எப்போதாவது மிஸ் செய்கிறீர்களா?
நான் மனதளவில் பலமான ஒரு பெண்ணாக இருந்தாலும் எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் எப்போதும் அப்படியே தான் இருக்கிறது. நிச்சயம் பல விஷயங்களில் நான் மாறியிருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவை அனைத்துமே வளர்ச்சியாகத் தான் தெரிகின்றன.
இந்த இன்டர்நெட் உலகில் நெகட்டிவிட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?
அதை வளர்ச்சிக்கான அடிப்படையாகத் தான் பார்க்கிறேன். அடிப்படையில் எனக்கு ஜனநாயகம் பிடிக்கும். இங்கு உரையாடல் அவசியம். எனவே மனதுக்குத் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுவதில் தவறில்லை. சிவராத்திரியில் நடனமாடியது, டாட்டூ குத்தியது எல்லாம் சர்ச்சையாகின. ஆனால் அது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் நம்மால் மூச்சுவிடக் கூட முடியாது. சிவனை எப்படி வழிபட வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக என்னால் வாழ முடியாது.
இந்தக் காலத்தில் உறவுகள் எப்படி மதிப்பிடப்படுகின்றன என்று நினைக்கிறீர்கள்?
அனைத்து உறவுகளுமே இங்கு முக்கியம் தான். அவர்கள் தான் நம்முடைய வாழ்க்கையை அழகாக்குகின்றனர். நண்பர்களுக்காக நான் எதையும் செய்வேன். என்னுடைய அம்மா தான் எனக்கு எல்லாமே. நான் நன்றாக இருக்க வேண்டும் என்று உண்மையில் விரும்பிய ஒரு இதயம் என்னுடைய பாட்டி. 'ரட்சகன்' படத்தில் வரும் சுஷ்மிதா சென் கேரக்டர் தான் நிஜ வாழ்க்கையில் நான். எனக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். நெகட்டிவ் மனிதர்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை.
நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும்போது அஜித்திடம் கற்றுக்கொண்ட விஷயம் என்ன?
அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. அஜித் சார் மிகவும் எளிமையானவர். அமைதியானவர். அனைவரையும் மதிக்கக் கூடியவர். எல்லோருடனும் சமமாகப் பழகுவார். அவருடைய மகள் மீது அவர் கொண்டுள்ள அன்பு என்னை வியக்க வைத்தது. 'விஸ்வாசம்' படத்தில் நடித்த கேரக்டர் போல் தான் நிஜ வாழ்க்கையிலும் அவர் தன் மகள் மீது அன்பு செலுத்துகிறார். அவரிடம் மிகவும் பிடித்த விஷயம் அது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)