/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/singh_0.jpg)
பிரபல பாலிவுட் நடிகரானஅபிமன்யூதமிழ், தெலுங்கு இந்தி, உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு எம்.ராஜா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து தலைவா, 10 எண்றதுக்குள்ள, தீரன் ஆகியபடங்களில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த்நடித்த அண்ணாத்த படத்தில்அபிமன்யூமுக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தில் நடித்த அபிமன்யூஅஜித்துடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், நீண்ட நாட்களாகவேஅஜித் உடன் நடிக்க வேண்டும் என்று ஆசை. அவரின் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)