abdul Razzaq apology to Aishwarya Rai

Advertisment

உலகக்கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் அணிஅடுத்த சுற்றுக்குத்தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது. இது தொடர்பாகப் பாகிஸ்தானில் நிகழ்ச்சிஒன்றில் பேசிய பாகிஸ்தான் அணியின்முன்னாள்கிரிக்கெட் வீரர் அப்துல் ரஸாக், “உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது” எனப் பேசியிருந்தார்.

ஐஸ்வர்யா ராய் குறித்து மரியாதை குறைவாகப் பேசியதாக, அப்துல் ரஸாக்கின் இந்த கருத்திற்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது. சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அப்துல் ரஸாக் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர்,“நேற்று, நாங்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஐஸ்வர்யா ராயின் பெயரை வாய் தவறி தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன். நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” எனப் பேசியுள்ளார்.