'வெயில்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இதன்பின் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகினார். பின்னர், சாம் ஆண்டன் இயக்கத்தில் 'டார்லிங்' படத்தில் ஹீரோவாக அறிமுகமாகினார். இதன் பின்னர் முழுநேர நடிகராகவே பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். பல வருடங்கள் கழித்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 'அசுரன்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசயமைத்தார். அசுரன் பட பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் பலரும் கவர்ந்தது. இந்நிலையில் ஜி.வி. நடித்து வரும் படங்களில் ஒன்றான 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் சிங்கிள் ட்ராக் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisment

gv prakash

'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காதல் பட இயக்குனராக அறிமுகமான எழில். தொடர்ந்து சில வெற்றிகள், பின் ஒரு இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் இன்னிங்ஸில்’மனம் கொத்தி பறவை’, ’தேசிங்கு ராஜா’, ’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ போன்ற காமெடி மசாலா படங்களை எடுத்து ஹிட் கொடுத்தார். ஜி.வி.பிரகாஷை வைத்து’ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தை இவர்இயக்குகிறார்.

Advertisment

sss

’எங்கேயும் எப்போதும்’, ’நெடுஞ்சாலை’ போன்ற படங்களின் பாடல்களின் மூலம் இசை ரசிகர்களைகவர்ந்த இசையமைப்பாளர் சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற’ஒத்த செருப்பு’ படத்தில் இவருடைய பின்னணி இசை அனைவராலும்பாராட்டப்பட்டது. ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ‘அடடா...’ என்னும் காதல்பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.

sss

‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற டைட்டில் 1978ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் படத்தின் டைட்டில். இந்தத் தலைப்பை விரும்பி வாங்கி வைத்திருக்கிறார் இயக்குனர் எழில்.இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஈஷா ரெப்பா, நிகிஷா படேல், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/qZBredvBkYU.jpg?itok=J5XbTYJS","video_url":" Video (Responsive, autoplaying)."]}