Skip to main content

”இலங்கையில் எங்களுக்கு நடந்ததை மறக்க முடியாது” - அனுபவம் பகிர்ந்த நடிகை ஆத்மிகா

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Aathmika

 

'யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களின் இயக்குநரான டீகே இயக்கத்தில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், பொன்னம்பலம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'.  ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படம் ரிலீஸ் செய்யப்படாமலேயே இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி காட்டேரி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் நடிகை ஆத்மிகா பேசுகையில், “திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ கிரீன் பேனரில் நடிப்பது என்பது எல்லா நடிகர்களின் ஆசையாக இருக்கும். பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்க பயமேன்’ படத்தை திரையரங்குகளில் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அவரது இயக்கத்தில், அதிலும் பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். பேயை வைத்து பயமுறுத்தாமல் சிரிக்க வைத்தவர் இயக்குநர் டீகே. அதனால் அவரது இயக்கத்தில் ‘காட்டேரி’ படத்தில் நடித்ததை சந்தோசமாக நினைக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது என்னை பற்றி இயக்குநர் பெருமிதமாக பேட்டி அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். சினிமா மீது இயக்குநர் டீகேவுக்கு இருக்கும் காதல் அலாதியானது. இலங்கையில் படப்பிடிப்பு நடந்தபோது ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறாது. ஏனெனில் பருவநிலை அப்படி. அதனால் அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவம் மறக்க இயலாது'' எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த விவேக்கிற்காக மரக்கன்று நட்ட நடிகை!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

bndc

 

நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதற்கிடையே நடிகர் விவேக் அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அதன் பலனாக இதுவரை 33 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை அவர் நட்ட நிலையில் திடீரெனெ காலமாகிவிட்டார். இதையடுத்து விவேக் விட்டுச் சென்ற பணியைத் தொடரவேண்டும் எனப் பல்வேறு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வலியுறுத்தி வரும் நிலையில், நடிகை ஆத்மிகா மறைந்த நடிகர் விவேக் நினைவாக தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதில்...

 

vdvdzvzd

 

"நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்தப் பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தான கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்" என்றார்.

 

 

Next Story

''அந்தப் படத்தை இழந்த தருணத்தில் அதிகம் வருத்தப்பட்டேன்'' - நடிகை ஆத்மிகா வேதனை!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

htdeh

 

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' படம் மூலம் அறிமுகமான நடிகை ஆத்மிகாவிற்குச் சமீபத்தில் 'ராஞ்சனா' படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தனுஷை வைத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்த நிலையில் அவருக்கு ஹிந்தி தெரியாததால் அந்த வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில் இதுகுறித்து ஆத்மிகா பேசும்போது...

 

''ஹிந்தி படத்தை இழந்த தருணத்தில் அதிகம் வருத்தப்பட்டேன். நான் பாலிவுட் படங்களின் ரசிகை. அதனால் இப்போது ஊரடங்கில் ஹிந்தி கற்று வருகிறேன். என் மொழி அறிவு இப்போது வளர்ந்துள்ளது. என்னால் புரிந்து பதிலளிக்க முடியும். மீண்டும் ஒரு நல்ல வாய்ப்புகளுக்காக நான் மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன். ஒரு வெற்றி கொடுத்துவிட்டு வரிசையாக நான்கு தோல்விப் படங்களைத் தருவது மோசமானது. அதனால் படங்கள் நடிக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நான் இந்தத் துறையில் நீண்ட நாட்கள் இருக்கப் போகிறேன்" எனக் கூறியுள்ளார்.