''அந்தப் படத்தை இழந்த தருணத்தில் அதிகம் வருத்தப்பட்டேன்'' - நடிகை ஆத்மிகா வேதனை!

htdeh

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' படம் மூலம் அறிமுகமான நடிகை ஆத்மிகாவிற்குச் சமீபத்தில் 'ராஞ்சனா' படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தனுஷை வைத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்த நிலையில் அவருக்கு ஹிந்தி தெரியாததால் அந்த வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில் இதுகுறித்து ஆத்மிகா பேசும்போது...

''ஹிந்தி படத்தை இழந்த தருணத்தில் அதிகம் வருத்தப்பட்டேன். நான் பாலிவுட் படங்களின் ரசிகை. அதனால் இப்போது ஊரடங்கில் ஹிந்தி கற்று வருகிறேன். என் மொழி அறிவு இப்போது வளர்ந்துள்ளது. என்னால் புரிந்து பதிலளிக்க முடியும். மீண்டும் ஒரு நல்ல வாய்ப்புகளுக்காக நான் மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன். ஒரு வெற்றி கொடுத்துவிட்டு வரிசையாக நான்கு தோல்விப் படங்களைத் தருவது மோசமானது. அதனால் படங்கள் நடிக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நான் இந்தத் துறையில் நீண்ட நாட்கள் இருக்கப் போகிறேன்" எனக் கூறியுள்ளார்.

Aathmika Danush
இதையும் படியுங்கள்
Subscribe