
பிக் ஸ்க்ரீன் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஆர்வகோளாறு' இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டு யூ சான்றிதழ் பெற்ற இப்படத்தில் புதுமுகங்கள் அபிசேக், பிரீத்தி டயானா ஆகியோர் நடித்துள்ளனர். இக்கரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு நடுவே சுமார் 100 திரையரங்களில் வெளியாகவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிவி.சந்தர் இயக்கியுள்ளார். மேலும் இவர் இப்படம் குறித்து பேசும்போது...
"எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் ஆர்வ மிகுதியால் செய்யும் தவறுதான் 'ஆர்வகோளாறு'. இன்னும் சொல்ல போனால் நமது வாழ்க்கையில் எங்கோ ஒருமுறை 'ஆர்வகோளாறு' நடந்திருக்கும். அது தொழிலில் இருக்கலாம், நட்பில் இருக்கலாம், காதலில் இருக்கலாம், குடும்பத்தில் இருக்கலாம். நாம் செய்த 'ஆர்வகோளாறு' நாம் உணர சில நாட்கள் ஆகும். இல்லை சில மாதமாகும், சில வருடங்கள் கூட ஆகலாம். அதை உணரும் பொழுது சிலருக்கு சிரிப்பு வரும் சில நேரம் அழுகை வரும் தவிர்க்க முடியாத ரணமும் பதிப்பும் எற்பட்டுவிடும். அதை தவிர்க்க முடிந்தால்?அதர்கொரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? என்பதை சொல்லும் திரைப்படம் 'ஆர்வகோளாறு'. 'ஆர்வகோளாறு' தவறல்ல அது ஒரு அனுபவம் என்ற கருத்தைச் சொல்லும் படம்" என்றார்.