Advertisment

பிரபல நடிகைக்கு வில்லனாகும் ஆரி

Aari is the villain for the famous actress

தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். இதனிடையே ஜமீல் இயக்கத்தில் ‘மஹா’ படத்தில் நடித்துள்ளார். சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ஹன்சிகாவிற்கு 50-வது படம் ஆகும். இதனை அடுத்து ஆதி நடிப்பில் உருவாகி வரும் 'பார்ட்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதனை அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் ஹன்சிகா இயக்குநர் இகோர் இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆரி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனனி துர்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இகோர் ஆர்யா நடிப்பில் வெளியான 'கலாபக் காதலன்' படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

aari Hansika Motwani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe