Advertisment

"நாங்கள் பண்ண வேண்டிய படத்தை மோடி தடுத்துவிட்டார்" - நடிகர் ஆரி பேச்சு 

aari

சூர்யா ஃபிலிம்ஸ் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிட்தி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

Advertisment

விழாவில் நடிகர் ஆரி பேசுகையில், "நான் உள்ளே வரும்போதே யார் யார் வந்திருக்கிறார்கள் எனக் கேட்டேன். ராஜன் சார், உதயகுமார் சார் வந்திருக்கிறார்கள் என்றார்கள். அப்படியென்றால் நான் போய்விடுகிறேன் அவர்களே எல்லாவற்றையும் பேசிவிடுவார்கள் என்றேன். சின்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் உதவாதபோது, அப்படத்திற்கு ஜாமின் தரும் முதல் ஆளாக அண்ணன் ராஜன் அவர்கள் இருக்கிறார். அண்ணன் ஏன் எல்லா பிரச்சனையும் பேசுகிறார் என்றால் அவருக்கு அவ்வளவு பிரச்சனை இருக்கிறது. அண்ணனும் நானும் பேசிக்கொண்டிருக்கும் போது ஒன்று ஞாபகம் வந்தது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும், ஒரு நலிந்த தயாரிப்பாளரைக் காட்டுங்கள் ஒரு ரூபாய் பணம் வாங்காமல் நான் நடித்து தருகிறேன்.

Advertisment

இதே உதவியை நான் நடிகர் சங்கத்திற்கும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த இயக்குநரும் நானும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது ஆனால் அதை தடுத்தது மோடிதான், டிமானிடைசேசன் வந்தது படத்தை பாதித்து விட்டது. நீங்கள் கேஜிஎஃப் ரசிகராக இருந்தாலும் சரி, பீஸ்ட் ரசிகராக இருந்தாலும் சரி, படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். இந்தப்படம் ட்ரைலரே தரமாக இருக்கிறது. அதில் உழைப்பு தெரிகிறது. தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி" எனப் பேசினார்.

aari
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe