xdxddsb

Advertisment

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துவருவதையடுத்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாகக் கலந்துகொண்டது, மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தப் புகார்களின் பேரில் கைதுசெய்யப்பட்ட ராஜகோபாலன், தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இச்சம்பவத்தைக் கண்டித்து கருத்துத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், இதுகுறித்து ‘பிக்பாஸ் 4’ வெற்றியாளர், நடிகர் ஆரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆசிரியர் போர்வையில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம். ராஜகோபாலன் போன்றோருக்கு சட்டப்படி எடுக்கும் நடவடிக்கை இதுபோன்றோருக்கு பாடமாக இருக்கட்டும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.