சமூக அக்கறையோடு செயல்பட்டு வரும் நடிகர் ஆரி தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். தற்போது, காதலின் உயர்வை சொல்லும் 'அலேகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். ஆனால் ஆரியோ கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். உடன் ஐஸ்வர்யா தத்தாவும் இருந்தார். இப்படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். 'அய்யனார்' பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படியும் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆரி
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)