Skip to main content

"உரிய தண்டனை வழங்க வேண்டும்" - ஐஸ்வர்யா ராயின் மகள் நீதிமன்றத்தில் வழக்கு

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

Aaradhya Bachchan case against YouTube channel

 

நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 2011 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆராத்யா பச்சன் எனப் பெயர் சூட்டப்பட்டது. இப்போது 12 வயதாகும் ஆராத்யா பச்சன் நிறைய பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா விழாக்களுக்கு பெற்றோருடன் கலந்து கொண்டு வருகிறார். பொது வெளியில் முகம் காட்டத் தொடங்கியதிலிருந்தே அவருடைய ஹேர் ஸ்டைல், அவர்  ஐஸ்வர்யா ராயின் கைகளைப் பிடித்துக்கொண்டு எப்படி நடக்கிறார் என சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனம் செய்து வந்தனர். 

 

இது குறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன், விமர்சனம் செய்தவர்களைக் கடுமையாகச் சாடியிருந்தார். இன்னொரு நேர்காணலில், "இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் ஒரு நன்கு அறியக்கூடிய நபர், அதனால் என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என் மகள் அதற்கு அப்பாற்பட்டவள். அவரைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் என் முகத்துக்கு நேராக வந்து சொல்லுங்கள்" எனக் கோபப்பட்டு பேசியிருந்தார். 

 

இந்த நிலையில் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளான ஆராத்யா பச்சன், இம்முறை உடல்நலம் சரியில்லாதவர் என்று சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதனை யூ-ட்யூபில் பல சேனல்கள் கூறி வந்தனர். இதனால் 10 யூ-ட்யூப் சேனல்கள் மீது ஆராத்யா பச்சன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அவர் சார்பாக வழக்கறிஞர்கள் ஆனந்த் மற்றும் நாயக் ஆகியோர் கொடுத்த மனுவில், "தவறான உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்புகிறார்கள். அந்த வீடியோவை நீக்க வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். பச்சன் குடும்பத்தின் நற்பெயரை கலங்கடிக்கும் விதமாக இதுபோன்று வதந்தியை பரப்புகிறார்கள். அவர்கள் பச்சன் குடும்பத்திடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் நோக்கில் இதை செய்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், "ஆராத்யா பச்சன், மைனர் என்பதால் அவரைப் பற்றி ஊடகங்களில் பொய்யான செய்திகளை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்