Aar Ya Paar trailer released

ஆதித்யா ராவல் நடிப்பில் ஜோதி சாகர் மற்றும் சித்தார்த் சென்குப்தா தயாரிப்பில் உருவாகியுள்ள இணையத்தொடர் 'ஆர் யா பார்’. இந்தத்தொடரை க்ளென் பரெட்டோ, அங்குஷ் மொஹ்லா மற்றும் நீல் குஹா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். ஆக்சன் டிராமாவாகஉருவாகியுள்ள இத்தொடர் வருகிற 30ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இத்தொடரின் ட்ரைலர்சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரைலரை பார்க்கையில் உயிர், பணம், அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான போராட்டத்தைப் பேசுவது போலத்தெரிகிறது. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சித்தார்த் சென்குப்தா கூறுகையில், "இரண்டு வெவ்வேறு உலகங்கள் ஒன்றாகக் கலக்கும்போது, அவைகளுக்குள் அடிக்கடி மோதலும் குழப்பமும் ஏற்படும். பேராசை மிகுந்த அதிகார உலகில் ஒரு இனம் உயிர்வாழப் போராடும் கதையை இந்தத்தொடர் கூறுகிறது" என்றார்.

நடிகர் ஆதித்யா ராவல் கூறுகையில், "சர்ஜு எனும் அழகான பாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். சர்ஜு தனது நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க விரும்புகிறார்.மேலும் தனது இலக்கை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வார். ஒன்றின் பின் ஒன்றாக பல சவால்களை சமாளிக்கும் போது இக்கதாபாத்திரத்தின் வெவ்வேறு சாயல்களை நீங்கள் காணலாம்" என்றார்.

Advertisment