Aanand L. Rai

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அத்ரங்கி ரே'. கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்துவரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ஆக்ரா பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தில், நடிகர் தனுஷ் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன.

Advertisment

இந்த நிலையில், இயக்குனர் ஆனந்த் எல்.ராய்க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எந்த அறிகுறியும் இல்லை. நலமாக உள்ளேன். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் என்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு, அரசாங்கத்தின் விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஆதரவிற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment