Advertisment

விஜய் சேதுபதி படத்தின் இந்தி ரீமேக்கில் இருந்து விலகிய அமீர் கான்?

Aamir Khan

Advertisment

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. 2017-ம் ஆண்டு வெளியான இப்படத்தை சஷிகாந்த் தயாரித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

தமிழில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது எனச் செய்திகள் வெளியாகின. முதலில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில், ஷாருக் கான் நடிப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர் கானும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் நடிக்க உள்ளதாகச் செய்திகள்வெளியானது. தமிழில் இப்படத்தை தயாரித்த சஷிகாந்த், பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, புஷ்கர் - காயத்ரி இயக்குகின்றனர்.

இந்த நிலையில், அமீர் கான் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா காரணமாக அவர் ஏற்கனவே நடித்து வந்த படங்களின் பணிகள் தடைபட்டுள்ளதாகவும், அவற்றை முடித்துக்கொடுக்க வேண்டியுள்ளதால், இப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், படக்குழுவிடம் இருந்து இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe