/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/359_2.jpg)
பிரபல இயக்குநர்விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில்அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம்‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில்இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மைக் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிலரும்‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு ஆதரவாககருத்துத்தெரிவித்து, படத்தை மக்கள் மத்தியில் ப்ரொமோட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமீர்கான்‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து கருத்துத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை நிச்சயமாகப் பார்ப்பேன். இதன் கதை நமது வரலாற்றைப் பேசியுள்ளது. காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்தது மிகவும் வருந்தத்தக்கது. இது மாதிரியான தலைப்புகளில் வெளிவருகின்ற படத்தை ஒவ்வொரு இந்தியரும் அவசியம் பார்க்க வேண்டும். இந்தப் படம்மனிதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவர் மனதையும் மிகவும் ஆழமாக தொட்டுள்ளது. அதனால் நான் நிச்சயம் பார்ப்பேன்” எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)