/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/27_45.jpg)
கே.ஜி. எஃப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக வலம் வரும் பிரஷாந்த் நீல், தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ்உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் ஜூனியர் என்.டி.ஆரின் 31வது படமாக உருவாகிறது.
இந்த நிலையில் என்.டி.ஆரின் 31வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அமீர் கானை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துவருவதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் அமீர் கான், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிரஷாந்த் நீல் உள்ளிட்ட மூவரும் ஒரே படத்தில் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஜூனியர் என்.டி.ஆர்,ஆர்.ஆர்.ஆர்படத்தைத்தொடர்ந்து கொரட்டாலா சிவா இயக்கத்தில் அவரது 30வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக பிரஷாந்த் நீலுடன் இணையவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)