Advertisment

திடீர் அதிர்ச்சி கொடுத்த அமீர்கான்! சோகத்தில் ரசிகர்கள்!!

sadgdsagv

Advertisment

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்குப் பிறகு அமீர்கான் நடிக்கும் படம் ‘லால் சிங் சட்டா’. இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படம் வெளியாகும் வரை மொபைல் ஃபோன் பயன்படுத்தப் போவதில்லை என்று அமீர்கான் முடிவெடுத்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. வேலை நேரத்தில் மொபைல் அழைப்புகள் அவருக்குத் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அமீர்கான் அதிரடியாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான் நேற்று (15.03.2021) தனது 56வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அதில்..."பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த என் அன்பிற்குரியவர்களுக்கு இதயத்திலிருந்து நன்றி. உங்கள் வாழ்த்துகளால் எனது இதயம் நிரம்பி இருக்கிறது. இதுதான் சமூக வலைதளங்களில் எனது கடைசி பதிவாக இருக்கும். இதில், நான் சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும், தற்போது விலகி இருக்க உறுதியாக நினைக்கிறேன். எனது அமீர்கான் புரொடொக்‌ஷனை அதிகாரப்பூர்வ சேனலாக மாற்றியதால் எதிர்காலத்தில் எனது படங்களின் அப்டேட்களை இதில் தெரிந்துகொள்ளலாம்” என கூறியதோடு மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் திடீரென விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார் நடிகர் அமீர்கான். இது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe