Advertisment

ஐ.பி.எல் இறுதி போட்டியில் அமீர்கான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

aamir khan lal singh chaddha movie trailer release IPL final

'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தை தொடர்ந்து அமீர் கான் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்துபணிகளும் முடிந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் படத்தின் ட்ரைலர்ஐ.பி.எல் இறுதி போட்டியில் வெளியிடப்படவுள்ளது. ஐ.பி.எல் தொடரின் 15வது சீசன் மும்பை மற்றும் புனேவில்நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி வரும் 29 ஆம்தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடிமைதானத்தில்நடைபெறவுள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாகஏ.ஆர் ரஹ்மான் தலைமையில் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் லால் சிங் சத்தா படத்தின் ட்ரைலர்வெளியிடப்படவுள்ளது. இதனைஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாகஒளிபரப்புகிறது. உலக வரலாற்றிலேயே இதுவரைஎந்த படத்தின்ட்ரைலரும் இதுபோன்ற கிரிக்கெட் நிகழ்ச்சிகளில்வெளியாகாத நிலையில் முதல் முறையாக இப்படத்தின்ட்ரைலர் வெளியாகவுள்ளது. இதனால் அமீர்கானின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளன.

Advertisment

lal singh chadda TATA Group NARENDRA MODI STADIUM ipl 2022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe