Skip to main content

'வாழ்க்கையில் ஆச்சரியங்கள் நடக்கும்' - நம்பிக்கையூட்டும் அமீர் கான்

Published on 25/07/2022 | Edited on 25/07/2022

 

Aamir khan Laal Singh Chaddha movie tamil trailer released

 

அமீர் கான் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லால் சிங் சத்தா'. இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். சமீபத்தில் இப்படத்தின் இந்தி ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  

 

இந்நிலையில் 'லால் சிங் சத்தா' படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஐக்யூ அளவு குறைவாகவும் இரு கால்கள் சரியில்லாதவராகவும் உள்ள ஒரு மனிதர் வாழ்வில் எப்படி முன்னேறி வெற்றிபெறுகிறார் என்பதை விறுவிறுப்போடு ஊக்கமளிக்கும் வகையில் சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது இந்த ட்ரைலர். ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவுள்ளது குறிப்பிடத்தக்கது.    

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வைரலான வீடியோ - வழக்கு தொடுத்து அவசர விளக்கமளித்த அமீர்கான்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Aamir Khan files case for fake video and said Never endorsed any political party

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் திரைபிரபலங்களும் கலந்து கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே கடந்த வாரம் லியோ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. ஆனால் அத்தகவலை சஞ்சய் தத் மறுத்திருந்தார். இந்த நிலையில் மற்றொரு பாலிவுட் முன்னணி நடிகரான அமீர் கான், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து அமீர் கான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமீர் கானின் செய்தித் தொடர்பாளர் பேசியதாவது, “அமீர் கான் தனது 35 ஆண்டுகால வாழ்க்கையில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளித்ததில்லை. கடந்த பல தேர்தல்களில் தேர்தல் கமிஷன் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த தனது முயற்சிகளை எடுத்துள்ளார். அமீர் கான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி சமீபத்தில் வைரலான வீடியோவால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது போலியான வீடியோ என்றும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமீர் தெளிவுபடுத்த விரும்புகிறார். 

மேலும் அனைத்து இந்தியர்களையும் வெளியே வந்து வாக்களிக்குமாறும், நமது தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்குமாறும் கேட்டுக்கொள்கிறார். அமீர் கானின் அந்த வைரல் வீடியோ, ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்பு அவர் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டவை. அதை ஏ.ஐ மூலம் எடிட் செய்துள்ளனர்” என்றார். 

Next Story

அஜித்திற்கு நன்றி தெரிவித்த விஷ்ணு விஷால்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

vishnu vishal thanked ajith for helping cyclonemichaung chennai flood

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இதனிடையே விஷ்ணு விஷால், தன்னுடைய வீட்டில் தண்ணீர் புகுந்து விட்டதாகவும் உதவியை எதிர்பார்ப்பதாகவும் பதிவிட்டிருந்தார். பின்பு தீயணைப்பு வீரர்கள் அவரையும் அதே பகுதியில் தனது தாயின் மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானையும் மீட்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் மக்களை பாதுப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.

 

இதையடுத்து அஜித் தங்களுக்கு உதவியுள்ளதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். மேலும் அஜித் மற்றும் அமீர் கானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு பொதுவான நண்பரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் மனப்பான்மை கொண்ட அஜித் சார் எங்களைப் பார்க்க வந்தார். எங்களுக்கும், எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு நண்பர்களுக்கும் போக்குவரத்து உதவிகளை செய்துகொடுத்தார்” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தங்களுக்கு உதவியவர்களுக்கு விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்தார். இதற்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உதவியவர்களை பாராட்ட, பின்பு அவருக்கும் விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்தார்.