Advertisment

நடிகர் அமீர்கான் மீண்டும் விவாகரத்து! 

gdgdgbd

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்குப் பிறகு அமீர்கான் நடிக்கும் படம் ‘லால் சிங் சட்டா’. இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக் ஆகும். பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமீர்கானும் அவரது 2-வது மனைவி கிரண் ராவ்வும் இனி கணவன் மனைவியாக நீடிக்கப்போவதில்லை எனவும், பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் அதில்...

Advertisment

"இந்த அழகான 15 ஆண்டுகளில் நாங்கள் வாழ்க்கை அனுபவங்களையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய உறவு நம்பிக்கையாலும், மதிப்பினாலும், காதலினாலும் வளர்ந்திருக்கிறது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன் மனைவியாக நீடிக்கப் போவதில்லை. ஆனால், சக பெற்றோராக, குடும்பமாக இணைந்திருப்போம். சில நாட்களுக்கு முன்பே நாங்கள் பிரிவதற்கு திட்டமிட்டு இருந்தோம். தற்போது அதை முறைப்படுத்துவதற்கான சூழல் அமைந்தது. எங்கள் மகன் ஆசாத்துக்கு ஓர் அர்ப்பணிப்பான பெற்றோராக நாங்கள் நீடித்திருப்போம். அவனை நாங்கள் இருவரும் சேர்ந்தே பராமரித்து வளர்ப்போம்.

Advertisment

bdbdbdfb

திரைப்படங்களிலும், பாணி அறக்கட்டளை உள்ளிட்ட வேலை தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம். எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரது தொடர் ஆதரவுக்கும், இந்த உறவின் பரிணாமம் குறித்த அவர்களது புரிதலுக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் இல்லாமல் எங்கள் இந்த முடிவைப் பாதுகாப்பு உணர்வுடன் எடுத்திருக்க இயலாது. எங்கள் நலம் விரும்பிகளிடம் வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம். எங்களைப் போலவே நீங்கள் விவாகரத்து என்பதை ஒரு முடிவாகப் பார்க்காமல் ஒரு புதிய பயணத்துக்கான தொடக்கமாகப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம்" என கூறியுள்ளனர்.

அமீர்கான் - கிரண் ராவ் தம்பதிக்கு அசாத் ராவ் கான் என்ற மகன் இருக்கிறார். இந்த அறிக்கையின் மூலம் இவர்களுடைய 15 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அமீர்கானின் இந்த திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமீர்கான் ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்து பின்னர் 16 ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe