aamir khan daughter ira khan accept his longtime boyfriend nupur propasal

Advertisment

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான் கடந்த 1986ஆம் ஆண்டு ரீனா தத்தாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும் ஐரா என்கிற மகளும் உள்ளார்கள். பின்பு அமீர்கானும் ரீனா தத்தாவும் கடந்த 2002ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனையடுத்து 2005ல் தன்னுடைய 'லகான்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆசாத் ராவ் கான் என்கிற மகன் உள்ளார். பிறகு அமீர்கானும் கிரண் ராவும் கடந்த வருடம் பிரிவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் அமீர்கானின் மகள் ஐரா தனது சமூக வலைதளபக்கத்தில் தன் காதலர் நூபுரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். நூபுர் ஃபிட்னஸ் பயிற்சியாளராக பணியாற்றிவருகிறார். இவர் சைக்கிள் பந்தய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

Advertisment

அந்த வீடியோவில் நூபுர், ஐராவை நோக்கி நடந்து சென்று முழங்காலில் நின்று, மோதிரத்தை ஐராவுக்கு அணிவித்து ப்ரொபோஸ் செய்கிறார். அதற்கு ஐராவும் 'எஸ்' என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த காதல் ஜோடிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.