/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/348_14.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ படம் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடைக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து கைதி 2 படத்தை இயக்கவுள்ளார். டிசம்பரில் இருந்து படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கமலுடன் விக்ரம் 2, சூர்யாவுடன் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார்.
இந்த படங்களை தவிர்த்து பாலிவுட் நடிகர் ஆமிர்கானுடன் ஒரு படம் பண்ணவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. அதை உறுதிப்படுத்து விதமாக கடந்த ஆமிர்கான் பிறந்தநாளான ஏப்ரல் 22ஆம் தேதி தனது எக்ஸ் பக்கம் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ், அவருடன் சந்திப்பு மேற்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். மேலும் இனிவரும் ஆண்டுகளில் திரையில் மேலும் மேஜிக்கை உருவாக்குவதற்காக அந்த சந்திப்பு என கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஆமீர்கான் லோகேஷ் கனகராஜுடன் படம் பண்ணுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர் “லோகேஷும் நானும் ஒரு படத்தில் இணைகிறோம். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அது ஒரு சூப்பர் ஹீரோ படம். பெரிய பொருட்செலவில் எடுக்கக்கூடிய ஆக்ஷன் படமாக இது இருக்கும். அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் பட பணிகள் தொடங்கும்” என்றுள்ளார். கூலி படத்திலே ஆமிட் கான் நடித்துள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)