Advertisment

‘பராசக்தி’ விவகாரத்துக்கு பச்சைக் கொடி

aakash baskaran meets vijay antony regards parasakthi title issue

விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு தமிழில் சக்தித் திருமகன் என்றும் மற்ற மொழிகளில் பராஷக்தி(PARASHAKTHI) என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காலை அறிவிக்கப்பட்டது.

Advertisment

பின்பு மாலை சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டிலுமே இப்படத்திற்கு பராசக்தி(PARASAKTHI) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குமே அவர்களது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதையடுத்து விஜய் ஆண்டனி தெலுங்கில் பராஷக்தி(PARASHAKTHI) என்ற தலைப்பை கடந்த ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அதன் சான்றிதழை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனி தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் பராசக்தி என்ற தலைப்பை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அதன் சான்றிதழை அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து டைட்டில் குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விஜய் ஆண்டனியை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் விஜய் ஆண்டனி பட இயக்குநர் அருண் பிரபுவும் இருந்துள்ளார். மேலும் டைட்டில் விவகாரம் குறித்து பேசி சுமுகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை குறிக்கும் வகையில் மூவரும் இருக்கும் புகைப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவரது நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவன எக்ஸ் பக்கத்தில் இந்தப் புகைப்படங்கள் பகிரப்பட்டு “ஒற்றுமையாக நாங்கள் நிற்கிறோம்” எனப் பதிவிடப்பட்டுள்ளது. அதை ரீட்விட் செய்த விஜய் ஆண்டனி ஆகாஷ் பாஸ்கரனை வரவேற்றுள்ளார்.

actor sivakarthikeyan Parasakthi vijay antony
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe