aadhik

அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, பரத் நீலகண்டன் இயக்கும் 'கே13' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இது குறித்து இப்பட இயக்குனர் பரத் நீலகண்டன் கூறும்போது...."ஸ்கிரிப்ட்டை முடித்தவுடன், இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நல்ல நடிகரை தேடிக்கொண்டிருந்தேன். இந்த படத்தில் முழு திரில்லர் விஷயங்களையும் இந்த கதாப்பாத்திரம் தான் தூண்டுகிறது. தனிப்பட்ட முறையில், ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என நான் உணர்ந்தேன். அவரிடம் இணை இயக்குனர்களாக இருக்கும் என் நண்பர்கள் மூலம் அவரை அணுகினேன். அவர் நடிக்கும் காட்சிகளில் நடிகை காயத்ரியும் இருந்தார், இருவருமே மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இப்போது கூட, நாங்கள் இந்த குறிப்பிட்ட காட்சியை படம் பிடித்ததை பற்றி நினைக்கும்போது, அது உற்சாகத்தை கொடுக்கிறது. இந்த படத்தின் முதல் ஷாட் அது தான், அனுபவம் வாய்ந்த இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், காயத்ரி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரிடம் வேலை வாங்குவது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் இங்கு அதற்கு நேர்மாறாக இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் ஒரு மிகச்சரியாக நடித்துக் கொடுத்தார்.படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் மற்றும் பாராட்டப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார். எஸ்பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த 'கே13' படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.