ஆர்.எப்.சி கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.பி.கோலி தயாரிக்கும் புதிய படமான "பார்ட்னர்" படத்தில் முதன்முறையாக ஆதியும் ஹன்சிகாவும் இணைகிறார்கள். ஈரம், அரவான், யூ-டர்ன் ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் நடிகர் ஆதியும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் 'மகா' நடிகையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹன்சிகாவும் இணையும் ''பார்ட்னர்'' படத்தில் ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார்.
இவர் குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், வி.டி.வி கணேஷ், ஜான்விஜய், ரவிமரியா, 'டைகர் கார்டன்' தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை டோரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும் படம் குறித்து அவர் பேசியபோது... "இப்படம் முழுக்க முழுக்க காமெடியை அடிப்படையாக கொண்டது. அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்ஷன் கலந்த ஒரு பேண்டசி விஷயமும் இருக்கிறது. அது ரசிகர்களை வெகுவாக கவரும். அந்த வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது. படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதிக்கு இப்படம் அவரது கரியரில் முக்கியமான படமாக இருக்கும். மேலும் ஆதியின் ஜோடியாக நடிக்கும் பாலக் லல்வாணி உள்பட படத்தில் பங்குபெறும் அத்தனை கதாபாத்திரங்களும் பெரிதாகப் பேசப்படும். இந்தப் பார்ட்னர் நிச்சயம் பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் மூவியாக இருக்கும்" என்றார். இன்று பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.