1000 பேருக்கு அன்னதானம் செய்த ஆதி- நிக்கி கல்ராணி

aadhi nikki galrani couple Food served 1000 people

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2009-ல் வெளியான 'ஈரம்' படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஆதி. 'யாகாவாராயினும் நாகாக்க', மரகத நாணயம்', படங்களில் இணைந்து நடித்த நடிகை நிக்கி கல்ராணிக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து. இதனைத் தொடர்ந்து காதலித்து வந்த ஆதி நிக்கி கல்ராணி ஜோடிகளுக்கு கடந்த 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் திருமண வரவேற்புநிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகைகள் ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் கலைப்புலி தாணு, நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஹரி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

ஆதி - நிக்கி கல்ராணி திருமணத்தையொட்டிதமிழ்நாடு முழுக்க ஆயிரம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, நாகூர் மற்றும் சென்னை போன்ற இடங்களில் உள்ள காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்கப்பட்டுள்ளது.ஆதி- நிக்கி கல்ராணி ஜோடியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Actor aadhi nikki galrani
இதையும் படியுங்கள்
Subscribe