Advertisment

13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இனைந்த 'ஈரம்' பட கூட்டணி

aadhi next is sabdham directed by Arivazhagan

தமிழில் 'மிருகம்' படம் மூலம் அறிமுகமான ஆதி 'ஈரம்' படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து ஆதி நடிப்பில் வெளியான 'அய்யனார்', 'யாகாவாராயினும் நா காக்க', 'மரகத நாணயம்' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனிடையே ரஜினியின் 'கோச்சடையான்', லிங்குசாமி இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான 'தி வாரியர்' உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆதி நடிப்பில் தற்போது 'பாட்னர்' படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹன்சிகா, பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்குகிறார்.

Advertisment

இந்நிலையில் ஆதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'ஈரம்' படம் இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். 'சப்தம்' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாது தயாரிக்கவும் செய்கிறார் அறிவழகன். 'ஈரம்' படத்திற்கு இசையமைத்த தமன் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான 'ஈரம்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் அதே கூட்டணி தற்போது 13ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநர் அறிவழகன் கடைசியாக 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற இணையத்தொடரை இயக்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.

Actor aadhi director arivazhagan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe