/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/343_10.jpg)
இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி இருவரும் ஈரம் பட வெற்றிக்கு பிறகு இணைந்துள்ள படம் சப்தம். 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வசனங்கள் ஏதும் இடம் பெறாத இந்த டீசரில் திகில் படங்களுக்கு உண்டான அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து படத்தில் வித்தியாசம் காட்டியது போல் இப்படத்தில் ஒலியை வைத்து முயற்சி செய்துள்ளனர் படக்குழு.
ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ஈரம் படம் இதே ஜானரில் வெளியாகி பலரது பாராட்டை பெற்றது. இதையடுத்து மீண்டும் ஒரு திகில் படத்திற்காக வித்தியாசமான கதைக்களத்தின் பிண்ணனியில் இணைந்துள்ள இக்கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த டீசர் தற்போது பலரதுகவனத்தையும் ஈர்த்துவருகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)