/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/22_61.jpg)
அம்பாசமுத்திரம்அம்பானி, திருநாள் ஆகிய படங்களைஇயக்கிய ராம்நாத் பழனி குமார் தற்போது கருணாஸ், அருண் பாண்டியன் நடிக்கும் ஆதார் படத்தை இயக்கிவருகிறார். ரித்விகா, இனியா உமா ரியாஸ்கான், திலீபன் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த படைப்பாகஉருவாகியுள்ள இப்படத்தின்டீசர், ட்ரைலர்விரைவில் வெளியாகும் என படக்குழுஅறிவித்துள்ளது.
Follow Us