Advertisment

"இந்தப் படத்தோட வியாபாரத்துல மிகப்பெரிய சதி நடந்திருச்சு" - ‘ஆன்டி இண்டியன்’ தயாரிப்பாளர் பேச்சு!

Aadham Bava

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிப்பில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. இப்படம் விரைவில் திரையங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரசாத் லேபில் நடைபெற்றது. இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி பாலா உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது, “மாறன் ஒரு மனோ தத்துவ நிபுணர் மாதிரி. படம் ரிலீசானதுமே பாக்கணும் அப்படிங்கிற ஆர்வத்தால நமக்கு ஏற்படுற மன உளைச்சல் அவரோட விமர்சனங்களைப் பார்த்ததும் அப்படியே குறைஞ்சிரும்.

Advertisment

இந்தப் படத்துக்கு மாறன்தான் இசையமைச்சிருக்காரு. அதுபத்தி அவரு தன்னடக்கமாதான் பேசினாரு. ஆனால் படத்துக்கு என்ன தேவையோ அதை சரியா பண்ணிருக்காரு. இந்தப் படம் வெளியானதும் நிறைய படங்களுக்கு அவரை இசையமைக்க கேட்டு வந்தாலும் அதுல ஆச்சர்யப்பட தேவையில்லை. வடிவேலுக்கு அப்புறமா யதார்த்தமா நடிக்கிற காமெடி நடிகர் இல்லாத சூழல் இருக்கு. ஆனால் இந்த விஜய் டிவி பாலா நிச்சயம் காமெடில பெரிய ஆளா வருவாரு. ஷூட்டிங் ஸ்பாட்டுல இவரோட நடிப்பைப் பார்த்து அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. ராதாரவி மாதிரி சீனியர் நடிகர்கள் சொல்கிற கரெக்சன்களை ஏத்துக்கிறதுல தப்பே இல்ல. அவரை மாதிரியான அனுபவசாலி நடிகர்களை நாம் தொடர்ந்து பயன்படுத்திக்கணும்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f09f49e0-49f3-439a-89c6-043384c5ac2f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_31.jpg" />

இந்தப் படத்தை வெளியிட விடக்கூடாதுன்னு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கிட்டிருக்காங்க. இந்தப் படத்தால ஏற்கனவே லாபம் கிடைச்சிடுச்சு அப்படின்னு நான் இதுக்கு முன்னாடி நிகழ்ச்சில சொல்லியிருந்தேன். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. ஏனென்றால் இந்தப் படத்தோட வியாபாரத்துல மிகப்பெரிய சதி நடந்திருச்சு. இந்தப் படத்தைவெளியிட்டா தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு ஒடிடி நிறுவனங்கள் இந்தப் படத்தை வாங்க தயங்குனாங்க. தமிழர்களுக்கு எதிரான ‘ஃபேமிலிமேன் 2’ மாதிரியான படங்களை ரிலீஸ் பண்றாங்க. ஆனால் தமிழர்களுக்கான படத்தை ரிலீஸ் பண்ண மறுக்கிறாங்க.அதனால ஒருபக்கம் தியேட்டர்கள்ல நாங்களே சொந்தமா ரிலீஸ் பண்றோம். இன்னொரு பக்கம் வெளிநாடுகள்ல காண்ட்ரலி அப்படிங்கிற நிறுவனம் மூலம் தியேட்டர் வசதிகள் இல்லாத ஊர்களுக்கு கேபிள் மூலமா இந்தப் படத்தை வெளியிட ஒப்பந்தம் பண்ணிருக்கோம். இதனால வியாபாரத்துல பாதிப்பு ஏற்படாம இருக்க ஒரு புது முயற்சி எடுத்துருக்கோம்னு சொல்லலாம்” என்று பேசினார்.

Aadham Bava bluesattaimaran
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe