Advertisment

கமல், சிம்பு பட பாணியில் கருணாஸ் படக்குழு

aadhaar movie success meet producer present car to director

நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக கருணாஸ் நடித்து சமீபத்தில் வெளியான படம் 'ஆதார்'. பி.எஸ். ராம்நாத் இயக்கியிருந்த இந்த படத்தில் ரித்விகா, அருண்பாண்டியன், திலீப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisment

இந்நிலையில் 'ஆதார்' படத்தி வெற்றியை தொடர்ந்து வெற்றி விழா நடத்தியுள்ளது படக்குழு. இந்த விழாவில் இயக்குநர் ராம்நாத், கருணாஸ், தயாரிப்பாளர் சசிகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது இயக்குநர் ராம்நாத்திற்கு தயாரிப்பாளர் சசிகுமார் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

Advertisment

இதே போல் ஏற்கனவே விக்ரம் பட வெற்றிக்கு இயக்குநருக்கு கார், உதவி இயக்குனர்களுக்கு பைக் என பரிசளித்தார் கமல்ஹாசன். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'வெந்து தணிந்தது காடு' பட இயக்குநருக்கு பைக்கும், நடிகர் சிம்புவுக்கு காரும், நடிகர் கூல் சுரேஷிற்கு ஐ ஃபோனும் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாங்கிக்கொடுத்தார். அந்த வரிசையில் தற்போது 'ஆதார்' படக்குழுவும் இதுபோன்று வெற்றியை கொண்டாடியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

karunas
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe