Skip to main content

தேதியை வெளியிட்ட  ‘ஆடை’ படக்குழு...

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார், அமலா பாலை வைத்து  ‘ஆடை’ என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்போதே சர்ச்சையாக இருந்த நிலையில் டீஸர் அதற்கு அடுத்த கட்டமாக இருக்கிறது என்றே சொல்லலாம். அமலா பால் ஆடையின்றி நடித்துள்ள ஷாட் அந்த டீஸரில் இடம் பெற்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
 

amala

 

 

தமிழ் சினிமாவில் எந்த முன்னணி நடிகையும் எடுக்காத இந்த முயற்சியை அமலா பால் எடுத்திருப்பதால் பலரும் பாராட்டிவருகின்றனர். நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும் அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே அமலா பால் நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். சமந்தாவும் பாராட்டி இருக்கிறார். இந்த சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் சமூக சிக்கல்களை பேசுவதாக சொல்லப்படுகிறது.  
 

இந்நிலையில் ஆடை படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இறைவனாய் தந்த இறைவியே…' - திருமண கோலத்தில் அமலா பால்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

 

 

அமலா பால், அவரது கடந்த பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். நேற்று நடந்த (05.11.2023) இந்த திருமணத்தில் மணமக்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். 

 


 

Next Story

'அவனும் நானும்' - திருமணத்திற்கு ரெடியான அமலா பால்

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

amala paul wedding announcemnet

 

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அமலா பால், கடைசியாக 'கடாவர்' படத்தில் நடித்திருந்தார். முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்த இப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் பெரிதளவு பேசப்படவில்லை. இப்போது மலையாளத்தில் பிரித்விராஜின் 'ஆடுஜீவிதம்' மற்றும் இன்னும் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். 

 

இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் அமலாபால், அவரது நண்பர் ஜனா தேசாய், ப்ரொபோஸுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அமலா பாலின் நண்பர் ஜகத் தேசாய், அமலா பாலுக்கு ப்ரொபோஸ் செய்கிறார். அதை ஏற்றுக்கொண்ட அமலாபால் அவருடன் இணைந்து நடனமாடுகிறார். இதன் மூலம் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதனால் பலரும் அமலா பாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

கடந்த 2014ஆம்  ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். பின்பு 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாடகர் பவ்நிந்தர் சிங்குடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியானது. மேலும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் வைரலானது. ஆனால் இதை அமலா பால் அந்த புகைப்படங்கள் வெறும் ஃபோட்டோஷூட் தான் என மறுத்துவிட்டார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jagat Desai (@j_desaii)